அரசியலமைப்பில் பாதிப்பு இருந்தால் திருத்தம் செய்யலாம்

அரசியலமைப்பில் ஏற்படுத்தக்கூடிய திருத்தத்தில் யாருக்காவது பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்து அது தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ளலாம் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாடு சுதந்திரம் அடைந்து எழுபது வருடங்களை அண்மித்தும் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை ஏற்படுத்த முடியாமல் போயுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். அதனால் அனைத்து கட்சிகளும் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடாகும்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து இன கட்சிகளும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு ஏகமானதாக திர்மானம் நிறைவேற்றின.

அதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு குழுக்கள் அமைத்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து சட்டமூலம் தயாரிக்க இருக்கின்றது. ஆனால் சட்டமூலம் தயாரிக்கப்பட முன்பே அரசியலமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அரசியலமைப்பில் ஏற்படுத்தக்கூடிய திருத்தத்தில் யாருக்காவது பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்து அது தொடர்பாக திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஆனால் தற்போது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் கருத்து வேறுபாடுகள் வீணாக காலத்தை தாழ்த்துவதாகும் அத்துடன் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும். அதனை நாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளோம்” என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here