தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் உரிய தீர்வில்லை

இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் பூர்த்தியடைகின்ற போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைத்ததாக இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயலணியின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (சனிக்கிழமை) விஜயம்செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, நான்கு பிரதேச செயலகங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ”எமது நாட்டில் இரு பிரதான கட்சிகள் காணப்படுகின்றன. ஆளும் கட்சி, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முற்படும் போது எதிர்கட்சியினால் அதற்கு எதிர்ப்பு கிளம்பும். இவ்வாறே சிறுபான்மை மக்களின் பிரச்சினை இழுபறியாகி உள்ளது.

ஆனால் தற்போது இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் நாட்டின் அபிவிருத்தியை பின்நோக்கி தள்ளும் இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டக்கூடிய பொன்னான காலம் உருவாகியுள்ளது.

அதற்கேற்ப நல்லிணக்க செயலணி என்றவகையில் நாட்டில் பொருளாதார ரீதியிலான அபிவிருத்தியையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும்  தங்களது அடையாளங்களை பாதுகாத்துக் கொண்டு, ஏனைய இனங்களுக்கு மதிப்பளித்து பல்கலாசார சமூகமாக நாட்டை முன்னெடுத்துச் செல்வதே எமது பிரதான நோக்கம்  என்றும் குறிப்பிட்டார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here