வவுனியாவில் மீண்டும் தலைதூக்கியுள்ள விபச்சாரம்

வவுனியாவில் அதிர்ச்சி தரும் தகவல் மீண்டும் வவுனியா நகரில் தலை தூக்கியுள்ளது விபச்சாரம் இது ஓர் திட்டமிட்ட சதியா என பலர் அச்சம் கொள்கின்றனர்.
வவுனியா நகர் பேருந்து நிலையத்தில் சிங்கள பெண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அறியப்படுகிறது.

இப்பெண்கள் காலையில் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் தாம் தூர பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் போன்று ஆடை அலங்காரங்களை மேற்கொண்டு வாடிக்கையாளர்கட்காக காத்து நிற்கின்றனர்.

அத்துடன் தாம் பல்கலைகழக மாணவிகள் போன்றும் தங்களை இனம் காட்டிகொண்டு வாடிக்கையாளர்களை கவர்கிறார்கள். தம் அருகில் செல்லும் ஆண்களை நேரடியாகவே கைகளை பிடித்து விபச்சாரத்திற்கு அழைக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இதன் பின்னனி யார்? இந்நிலையானது எமது கலாச்சாரத்தையும் எம் இளைஞர்களையும் சீரழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு விசமிகளால் உருவாக்கப்பட்டுள்ளதா என்று பலர் விசனம் கொள்கின்றனர். காரணம் இவர்கள் தமது தொழிலை மேற்கொள்ளும் பிரதேசமானது மிகுந்த சன நடமாட்டத்துக்குள்ள பிரதேசம் என்பதுடன் அரச புலனாய்வு பிரிவினரும் அதிகமாக நடமாடும் பிரதேசமாகும்.

இதை இவர்கள் அறியாமல் உள்ளார்களா? எனவே இது திட்டமிடப்பட்டு எமது சமூகத்தை சீரழிப்பதற்காக விசமிகளால் உருவாக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே எமது இளம் சமுதாயம் இதனை கருத்தில் கொண்டு இப்போதைக்கு அடிபணியாது எம் இனத்தை அழிக்க துடிக்கும் விசமிகளுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்பதுடன் இதற்குறிய நடவடிக்கைகளை எம் சமூக ஆர்வலர்கள் முன்னெடுக்க வேண்டும்.

   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here