சட்ட விரோதமாக வெளிநாடு செல்லும் தொழிலாளர்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிநாடு செல்வோர் தொடர்பில் எவ்வித கவனம் செலுத்த முடியாதென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

அவ்வாறான பணியாளர்கள் வெளிநாடுகளில் எதாவது விபத்துக்களுக்கு முகம் கொடுத்தாலும் முக்கியத்துவம் வழங்கப்பட மாட்டாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் நபர்கள் அந்த நாடுகளில் ஏதாவது சிரமங்களுக்கு முகம் கொடுத்தால் அவர்களுக்காக செயற்படுவதற்கான வாய்ப்புகள் அமைச்சில் இல்லை என அவர் குறிப்பட்டுள்ளார்.

மேலும் அவர்கள் செல்லும் வெளிநாடுகளில் உட்பட அவர்களுக்காக பொறுப்புடன் செயற்பட மாட்டார்கள் என கூறப்படுகின்றது.

எப்படியிருப்பினும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பிற்காக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைச்சினால் அவதானம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here