புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்கான விழிப்புணர்வு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய உள்ளூர் அதிகார சபைத்தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் வாகன பேரணியுடனான விழிப்புணர்வு செயற்பாடு நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் அரசியல் கலாச்சாரத்தில் ஆக்க பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு குறித்த செயற்திட்டம் நடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வட்டாரமுறைதெரிவில் எவ்வாறு வேட்பாளர் பட்டியலைத்தயாரிப்பது என்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

விகிதாசார பிரதிநிதித்துவம் தொடர்பில் பட்டியல் தயாரிக்கப்படும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய நடைமுறைவிதிகள், பெண்களுக்கான 25வீத பட்டியல் தயாரிப்பு, மற்றும் அரசியல் கலாசாரத்தில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துதல் பற்றிய விதந்துரைப்புகளைப் பெறுதல் என்பனவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக சேவை அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், கிராமமட்ட அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பிரதேச மக்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here