தந்தை செல்வாவின் 119 ஆவது பிறந்த தினம்

ஈழத்து காந்தி என அழைக்கப்படும் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்த தினமான இன்று வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட தந்தை செல்வா அரங்காவல் அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனிமார்க் தலைiயில் மன்னாரில் பிறந்த தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தந்தை செல்வா உருவச்சிலைக்கு முன்னாள் நிகழ்வுகள் இடம் பெற்றது.முதலில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மாலை அனுவிக்கப்பட்டு,சிறப்பு உரைகளும் இடம் பெற்றது.

இதன் போது சர்வமதத்தலைவர்கள்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,முன்னாள் எம்.பி.எஸ்.வினோ நோகராதலிங்கம்,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட அமைப்பாளர் பற்றிக் வினோ,தமிழரசுக்கட்சியின் மாவட்ட தலைவர் தி.பரஞ்சோதி உற்பட பலர் கலந்து கொண்டு மாலை அனுவித்து தந்தை செல்வாவின் 119 ஆவது பிறந்த தினத்தை அனுஸ்ரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here