நாட்டை மீட்ட படையினரை தண்டிக்கவே நல்லாட்சி முயற்சிக்கிறது

வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் கொண்டு போர்குற்ற நீதிமன்றப் பொறிமுறையொன்றை அமைத்து அதன் ஊடாக நாட்டை மீட்ட படையினரை தண்டிக்கவே நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜெனிவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்த அரசாங்கம் மீண்டும் உறுதிமொழி வழங்கியுள்ளது.

இதனூடாக சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை தண்டிக்க அரசாங்கம் இணங்கியிருக்கிறது. இது நல்லாட்சி அரசாங்கத்தின் இனத்துரோக செயற்பாட்டையே வெளிப்படுத்தி நிற்கிறது.

இலங்கை இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டுள்ள 2017ஆம் ஆண்டு தீர்மானத்தில், பொதுமக்களை கொலை செய்தல், சித்திரவதை, பாலியல் வன்முறை, கடத்தல்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகள் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here