பாவனைக்குதவாத 2 ஆயிரம் கிலோகிராம் கருவாடு பறிமுதல்

பண்­டிகை காலத்தில், நுகர்­வோ­ருக்கு விற்­பனை செய்யும் நோக்கில் புறக்­கோட்­டையில் பாரிய குளி­ரூட்­டி­களில் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த பழு­த­டைந்த நிலை­யி­லான 2 ஆயிரம் கிலோ­கிராம் நிறை­யு­டைய கட்டாக் கரு­வாட்­டினை, நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­ சபை அதி­கா­ரிகள் கைப்­பற்­றி­ய­தோடு அந்த விற்­பனை நிலை­யத்­தி­னையும் சீல் வைத்து மூடினர்.

வெளிநாட்­டி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட இந்த கரு­வாடு, 20 இலட்சம் ரூ­பாய்க்கும் மேற்­பட்ட பெறு­ம­தி­யா­ன­தென நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­சபை அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த பழு­த­டைந்த இந்த கரு­வாட்­டினை, பண்­டிகைக்காலத்தில் துண்டு துண்­டாக வெட்டி பொதி செய்து விற்­பனை செய்­வ­தற்குதிட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

குறித்த வியா­பா­ரியை, ஏப்ரல் 4ஆம் திகதி, மாளி­கா­கந்தை நீதி­மன்­றத்தில்ஆஜர் செய்­ய­வுள்­ள­தாக, அதி­கா­ர­ சபை அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இதே­வேளை, பண்­டிகைக் காலத்தில் பொருட்­க­ளுக்கு எந்தத் தட்­டுப்­பாடும்ஏற்­ப­டாத வகையில், நுகர்­வோரின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் நியா­ய­மான விலையில் பொருட்கள் விற்­பனை செய்­யப்­ப­டு­வதை உறுதி செய்யுமாறும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அதன் தலைவர் ஹஸித திலகரத்னதெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here