வடக்கு முதல்வர் அலுவலகத்தின் முன்னால் விபத்து

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அலுவலகத்தின் முன்னால் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிற்றூர்தி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியத்தினாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றதுடன், இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில், படுகாயமடைந்த நபர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் குறித்த விபத்து சமத்துவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here