டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 5 பேருக்கு வழக்குத்தாக்கல்

புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்பட்ட விசுவமடுப் பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடியவாறு சுற்றாடலை வைத்திருந்த ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார பணிமனை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் சகல இடங்களிலும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரப் தொழிலாளர்களும், சிவில்பாதுகாப்பு பிரிவினரும், பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது விசுவமடுப் பகுதியில் நுளம்பு அதிகம் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 5 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார பணிமனைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 4ஆம் திகதிவரை புதுக்குடியிருப்பு பகுதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here