மீள்குடியேற்றப்பட்டும் அடிப்படை வசதிகள் கிடைக்காத பிலக்குடியிருப்பு மக்கள்

முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு பகுதியில் மக்கள் மீள்குடியேறி ஒருமாத காலமாகியும் இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் வாழ்ந்து வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு கிராம அலுவலகர் பிரிவின்கீழ் உள்ள பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி கடந்த ஜனவரி 31ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதி வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி அந்த மக்களின் 42 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதுடன் 84 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளனர்.

இவ்வாறு மீள்குடியேறிய மக்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் குறித்த குடும்பங்கள் கொட்டகைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக குழந்தைகள் முதியோர் கர்ப்பிணிகள் என பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த பெப்ரவரி மாதம் இம்மக்கள் மீள்குடியேறிய போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் உணவல்லாத பொருட்கள் மாத்திரமே வழங்கப்பட்டன.

இவை தவிர வேறு எந்த உதவிகளும் இதுவரை எமக்கு வழங்கப்படவில்லை. போராடி எங்கள் நிலத்தை பெற்றதால் இவ்வாறு அரசாங்கத்தினால் பழிவாங்கப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here