சதுரங்கச் சம்மேளனத்தின் கிளிநொச்சி மாவட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகள்

இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான இளையோர் சதுரங்கப் போட்டிகளின் கிளிநொச்சி மாவட்ட மட்டப் போட்டிகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் இப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் மு.ப 8.30 மணியளவில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள போட்டிகள் வயதடிப்படையில் நடாத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில், 8 வயதின் கீழ், 10 வயதின் கீழ், 12 வயதின் கீழ், 14 வயதின் கீழ், 16 வயதின் கீழ், 18 வயதின் கீழ் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் பிரிவுகளாக நடைபெறவுள்ளன. வயதுகள் 2017ஆம் ஆண்டு 01ஆம் மாதம் 01 ஆம் திகதி உள்ளவாறாக கணிப்பிடப்படும்.

இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் தேசிய மட்ட இளையோர் போட்டிகளில் பங்குபற்ற தகமை பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

தேசிய மட்ட இளையோர் போட்டிகளிற்குத் தகைமை பெறும் போட்டியாளர்களது எண்ணிக்கை தொடர்பான விடயங்கள் போட்டி ஆரம்பத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

தேசிய மட்ட இளையோர் சதுரங்கப்போட்டிகள் சர்வதேச சதுரங்க தரப்படுத்தல் பட்டியலுக்கு (Rating) உட்பட்டதாகும்.

இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் கிளிநொச்சி மாவட்டப் பாடசாலை மாணவர்களது விண்ணப்பங்களை பொறுப்பாசிரியர் எதிர்வரும் 10ம் திகதி பி.ப 2.00 – 4.00 மணி வரை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் உரிய பதிவுக்கட்டணங்களைச் செலுத்தி நேரடியாக சமர்ப்பித்தல் வேண்டும்.

வருகை தரும் போது குறித்த மாணவர்களது வயதினை உறுதிப்படுத்துவதற்காக அவர்களது பிறப்புச் சான்றிதழ்களையும் கொண்டு வருதல் வேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத் தலைவர் தி.சிவரூபன் அறிவித்துள்ளார்.

10ம் திகதி பதிவசெய்யதவர்கள் எவரும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவங்களும் , அறிவுறுத்தல்களும் பாடசாலைகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதகவும் , இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 077 742 0181 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டிகள் கடந்த வருடம் முதல் முறையாக கிளிநொச்சியில் நடைபெற்றதுடன் 53 பேர் தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டு அதில் ஒருவர் சர்வதேச சதுரங்கத் தரப்படுத்தல் பட்டியலில் இடம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here