சரவணன் மீனாட்சி புகழ் மைனாவின் கணவர் தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகையான நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை கலைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையான நந்தினி வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். அதில் மைனா கேரக்டரால் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

அதன் பின்னர் மைனா நந்தினி என்று அழைப்பட்டார். நந்தினி கடந்த ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் உள்ள வளசரவாகக்த்தில் வசித்து வந்தனர்.

திருமணமாகியுடன் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் கார்த்திகேயன் திடீரென்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை, இதுதொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி ஓராண்டு நிறைவடையாத நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டிருப்பது சின்னத்திரை கலைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here