சைட்டம் பிரச்சினை வியூகத்தில் பல்வைத்தியர் சங்கமும் இணைவு

மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரி பிரச்சினைக்கு அரசு இன்னும் ஒருவார காலத்தில் தீர்வு வழங்காவிட்டால் அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக இலங்கை பல் வைத்திய சிகிச்சை வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருக்கும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு எவ்வித ஆக்கபூர்வமான முயற்சியையும் முன்னெடுக்கவில்லை.

மேலும் பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு காலத்தை கடத்தி வருகின்றது.

எனவே இலங்கை வைத்தியர் சங்கமும், சுகாதார அமைச்சின் ஏனைய பல தொழிற்சங்கங்களும் இணைந்து முன்னெடுக்கவுள்ள பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் தாங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இலங்கை பல் வைத்திய சிகிச்சை வைத்தியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here