வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சித்திரைப்புத்தாண்டு நிகழ்வு

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நொச்சிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியலாயத்தின் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் கு. ஜெயக்குமார் தலைமையில் இன்று(04) மாலை 02.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பின் கோடீஸ்வரன், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்ப.டெனீஸ்வரன்,

வடமாகாண சபை உறுப்பினார் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வடக்கு கல்வி வலயப்பணிப்பாளர் உமாதேவி உமாதேவன் ஆசிரிய ஆலோசகர்கள், கிராமசேவையாளர், பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

அத்துடன், சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் பல கிராமங்களை உள்ளடக்கிய பாரம்பரிய விளையாட்டுக்கள், முட்டி உடைத்தல், சறுக்கமரம் ஏறுதல், கிடுகு பின்னுதல், கிராமிய நடனம், சிறுவர்களின் பலூன் உடைத்தல், தலையனைச்சண்டை போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டுள்ளன.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here