என் வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்கள் கொஞ்சமல்ல! ரணில் உருக்கம்

இலங்கை ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அடைய முயற்சிகளை எடுத்துக்கொண்டிருகிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘ரணில் விக்கிரமசிங்க – அரசியல் தலைமைத்துவம்’ என்னும் நூல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெளியிடப்பட்டது.

நேற்யை தினம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.

‘ரணில் விக்கிரமசிங்க – அரசியல் தலைமைத்துவம் என்னும் நூலினை தினேஷ் வீரக்கொடி எழுதியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணங்கள், தலைமைத்துவங்கள் அடங்கிய நூலாக இது வெளிவந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நூலின் முதற்பிரதி தினேஷ் வீரக்கொடியினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கிவைக்கப்பட்டது.

அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் வழங்கிவைக்கபட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,

தனிநபர்கள் ஒரு சிலர் மட்டும் 1970ல் என்னுடன் அரசியல் அரங்கில் சேர்ந்தார்கள். பல தசாப்தங்களாக அரசியலில் ஈடுபடுவது உண்மையில் மிகவும் சவாலான பணியாகும்.

எனது காலத்தில் சந்தோஷம், துக்கம், உயர்வு தாழ்வு முதலான அனுபவம் பெற்றேன். இவ் அனைத்தும் நிகழ்ந்த போதிலும், நான் ஒரு அரசியல்வாதியாக வெற்றிகரமான வாழ்க்கையை வழிவகுத்து நிற்கிறேன் என நினைக்கிறன்.

பலவிதமான எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்தித்தேன். இலங்கை ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அடைய முயற்சிகளை எடுத்துக்கொண்டிருகிறேன். என் அரசியல் பயணம் பற்றி தன் ஆராய்ச்சி குழு வினருடன் தினேஷ் வீரக்கொடியின் எழுத்துக்களுக்கு என் நன்றியை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில், எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here