அம்பாறையிலுள்ள பள்ளிவாசலில் அனர்த்தம்: 3 பேர் மரணம் – 600 பேர் வைத்தியசாலையில்

அம்பாறையில் பள்ளிவாசல் ஒன்றில் வழங்கப்பட்ட தானத்தில் உணவு அஜீரணமானதால் நூற்றுக்கு மேற்பட்டடோர் பாதிப்படைந்துள்ளனர்

அம்பாறை, வானகமுவ முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் வழங்கப்பட்ட தானத்தில் உணவு அஜீரணமானதால் 500க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

இரக்காமம் வைத்தியசாலையில் மாத்திரம் இன்னமும் 80 பேர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகின்றது.

இந்த நோயாளிகளுக்கு மேலதிகமாக அக்கறைப்பற்று மற்றும் அம்பாறை பகுதி வைத்தியசாலைகளில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்காமத்தில் 600 ற்கும் அதிகமான மக்கள் வைத்தியசாலையில்அனுமதி – வெளிப்பிதேசங்களில் இருந்து வைத்தியர்கள் கடமையில் – அமைச்சர் நசீர் ஏற்பாடு: மூவர் மரணம்:

இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக வழங்க சகல நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 600ற்கும் அதிகமான மக்கள் சுகயீனமுற்ற நிலைமையில் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பில் மேலும் அறியவருகையில்.

வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற கந்தூரி நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் அங்கு பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டதன் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறு பாதிப்புக்குள்ளான மக்கள் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு வைத்திய சிகிச்சைகளை பெற்றுவருவதாகவும், அவர்களுக்கான சகல வைத்திய சிகிச்சைளையும், அவர்களுக்கு தேவையான வைத்திய மருந்து வகைகளையும் வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் நேரடியாக குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஏற்பாடு செய்துள்ளார்

மேலும்இ குறித்த வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்ததினை தீவிரமாக கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் உடனடியாக ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் இருந்து 30ற்கும் மேற்பட்ட வைத்தியர்களும் தாதியர்களும் கொண்டுவரப்பட்டு தற்போது தீவிரமாக நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டதுடன் அவசரமாக மருந்து வகைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ஜமீல் காரியப்பர் தெரிவித்தார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் மரணமானதுடன் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன். மூன்று கற்பிணித்தாய்மார்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here