நியூசிலாந்தில் பிரபல்யம் அடைந்துள்ள இலங்கை பெண்!

நியூசிலாந்தில் பெண்ணொருவர் பாரம்பரிய நடனம் கற்பித்து பிரபல்யம் அடைந்துள்ளார்.

ஆக்லாந்து பிரதேசத்தில் வாழும் இலங்கையை சேர்ந்த நதீக்கா பிரியதர்ஷனி என்ற பெண் அங்குள்ளவர்களுக்கு நடனம் கற்பித்து பிரபலமடைந்துள்ளார்.

சிறந்த வடிவமைப்பாளரை போன்று சிறந்த நடன கலைஞராகவும் அவர் செயற்பட்டு வருகின்றார். நதீகா Dancing Angels என்ற நடன குழுவின் உறுப்பினராகவும், வடிவமைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

Dancing Angels என்பது நியூசிலாந்து ஆக்லாந்து நகரதத்தை அடிப்படையாக கொண்ட இலங்கை நடன குழுவாகும்.

இலங்கையின் கலாசார நடனம் உட்பட பாலே, இந்திய நடனம், பரத நாட்டியம், கதக் மற்றும் பொலிவுட் நடன கலைகளும் அவர் அறிந்தவராக காணப்படுகின்றார்

2012 தனது குடும்பத்துடன் நியூசிலாந்து செல்வதற்கு முன்னர் இலங்கையின் அரச பாடசாலைகளில் 10 வருடங்கள் நடன ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

இந்த நிலையில் அவர் தற்போது நியூசிலாந்து நாட்டவர்களுக்கு நடனம் கற்பித்து பிரபல்யமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here