வவுனியாவிலும் தொடரும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டத்தின் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் நோயாளர்கள் பலரும் விரக்தியுடனும், ஏமாற்றத்துடனும் திரும்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதிச் சேவை மட்டுமே இன்று தொழிற்படுகின்றதுடன், ஏனைய மருத்துவ சேவைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here