ஜனாதிபதி விருதுகளை பெற்ற பிரபல இயக்குனர் காலமானார்

இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரான வசந்த ஓபேசேகர இன்று காலை காலமானார்.

கொழும்பு வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த வசந்த ஓபேசேகர ஒரு பத்திரிகையாளராக தனது சேவையினை தொடங்கி பின்னர் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார்.

இவர், 70 ஆம் ஆண்டுகளில் Walmathwuwo மற்றும் Palagetiyo ஆகிய பிரபல்யமான திரைப்படங்களையும், 80 ஆம் ஆண்டுகளில் Dadayama மற்றும் Kedapathaka Chaaya என்ற அற்புதமான படைப்புகளையும் வழங்கியிருந்தார்.

இவ்வாறு பல படைப்புக்களை தந்த இயக்குனரான வசந்த ஓபேசேகர 11 சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருதுகளையும், ஜனாதிபதி விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

80 வயதுடைய இவர் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here