தலவாக்கலையில் முச்சக்கரவண்டி விபத்து

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று மதியம் (சனிக்கிழமை) நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியின் தடுப்புக்கட்டை செயலிழந்ததன் காரணமாக இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து  தெரியவந்துள்ளது.  முச்சக்கரவண்டியில் சாரதியும், மற்றொருவரும் பயணித்துள்ளதுடன், இருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை தற்பொழுது நுவரெலியாவில், வசந்தகால நிகழ்வுகள் ஆரம்பித்து வெளிமாவட்டங்களிலிருந்து அதிகமானவர்கள் வருகை தருவதால் சாரதிகளை உரிய போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பித்து அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here