பாபுல் விற்றால் ஒருவருட சிறைத்தண்டனை! – நாடாளுமன்றம் அனுமதி

உடலுக்கு தீங்கினை ஏற்படுத்துவதோடு, போதையை தூண்டக்கூடிய பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலைத் தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட் ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவற்றை விற்பனை செய்தால் அபராதம் அல்லது ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சிகரெட் பெட்டிகளில் 80 வீத எச்சரிக்கைப் புகைப்படம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 20 வீதமான பகுதியில் பெயரை மட்டுமே குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், தனி சிகரெட் விற்பனைக்கு தடைவிதிக்கப்படும் வகையிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலைகள் காணப்படும் பகுதியிலிருந்து 500 மீற்றர் வரையான தூரத்தில் சிகரெட், மதுபானம் என்பன விற்பதற்கு தடை விதிக்கப்படுமெனவும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here