கொழும்பில் அலட்சியம்! பேராபத்துக்களை உருவாக்கும் நோய்கள்

அரசாங்கம் பலவிதமான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தாலும், பொது மக்களின் அலட்சிப் போக்கு காரணமாக நோய்த் தொற்றுக்கள் உட்பட, பல சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொது மக்கள் தமது உதாசீனப்போக்கைக் கைவிட்டு ஆலோசனைகளைக் கடைப்பிடித்துவந்தால், பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதைச் செய்ய வேண்டாம் என கூறுகிறோமோ அதனைச் செய்வதே மனிதனின் இயல்பு. மனிதனின் இந்த இயல்பு அவனுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது என்பது யதார்த்தமானதாக அமைந்துவிடுகிறது.

அரசாங்கமும், அதிகாரிகளும் பல்வேறு இடங்களில் செய்யக் கூடாத, தவிர்க்கப்பட வேண்டியவைகள் குறித்த அறிவிப்புப் பலகைகளை ஆங்காங்கே காட்சிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, வாகனங்களை நிறுத்தாதீர், குப்பைகளை கொட்டாதீர். ப்ளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர் போன்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதனை காண முடிகிறது.

இவ்வாறான நிலையில் குப்பைகளை கொட்டாதீர் என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கும் பலகைக்கு கீழ் குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

இந்த அலட்சிய போக்கே பிற்காலத்தில் பாரிய பிரிச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது. குறிப்பாக சம காலத்தில் இலங்கை முழுவதும் வைரஸ் நோய் தாக்கமும், டெங்கு காய்ச்சலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த நோய் தாக்கம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும், பொது மக்களின் சில அலட்சிய போக்கும் இவற்றிற்கு காரணமாக அமைகின்றன.

அந்த வகையில் கொழும்பில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி ஒன்றில் குப்பை போடவேண்டாம் என அரச தரப்பில் அறிவிப்புப் பலகை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும்,

அந்த இடத்தில் அதிகளவான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனை பொது மக்கள் உள்ளிட்ட உரிய தரப்பினர்கள் எவரும் கருத்தில் கொள்ளாதிருப்பதே கவலைக்குரிய விடயமாகும்.

எனவே, இனிவரும் காலத்தில் உரிய தரப்பினர் இவ்வாறான செயற்பாடுகளில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், பொது மக்களும் இவ்வாறான அலட்சிய போக்கிலிருந்து விடுபட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

“தன்வினை தன்னைச்சுடும்” என்ற பலமொழிக்கு ஏற்ப தாம் விடும் அலட்சியப் போக்கே பின்னொரு நாள் தமக்கே ஆபத்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here