திருகோணமலையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்! 15 பேர் பலி

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 3,438 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் பீ.கயல்விழி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 12 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுகள் காணப்படுகின்றன

இவற்றில் 5 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுகளில் டெங்கு அபாயம் காணப்படுகின்றன. அதில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,344 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9 உயிரிழ  ப்புகளும் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.

திருகோணமலை நகர், மூதூர், குச்சவெளி ஆகியவற்றில் தலா ஒரு உயிரிழப்புச் சம்பவமும் குறிஞ்சாங்கேணியில் 3 உயிரிழப்புச் சம்பவங்களும், டெங்குக் காய்ச்சல் காரணமாக இடம்பெற்றுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here