யானைகளின் தொல்லையால் பாதிப்பில் பொதுமக்கள்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமமான சூடுபத்தினசேனை மஜ்மா மேற்கு கிராமத்தில் நேற்று இரவு புகுந்த யானைகளினால் வீட்டுத்தோட்டங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, மரங்கள் உட்பட தமது வீட்டுத்தோட்டத்தினையும், யானைகள் சேதமாக்கி சென்றுள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நீர்ப்பற்றாக்குறையின் மத்தியிலும் தாம் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும், அதனை நேற்றிரவு யானைகள் சேதமாக்கியுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு வேளைகளில் தாம் பயத்துடனேயே இப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யானைகளின் பிரச்சினைகளில் இருந்து நிரந்தர தீர்வினை வழங்கும் பொருட்டு, பாதுகாப்பான வேலி அமைத்து தருவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here