இன்புலுவன்ஸா-யு வைரஸ் காரணமாக கர்ப்பிணித்தாய் மரணம்…

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் ஒருவர் இன்புலுவன்ஸா-யு வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 8ம் திகதி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் மாற்றப்பட்ட ஸபீர் றிமாஸா என்கின்ற 32 வயதான கர்ப்பிணித்தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர் தோப்பூர் பிரதேசம் அல்லை நகரை வசிப்பிடமாக கொண்டவராவார்.

திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்று காலை இவர் உயிரிழந்துள்ளார்.

இறந்த கர்ப்பிணித்தாயிற்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பலன் இன்றி மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here