நாமலின் புது அவதாரம்! தந்தை ஒரு பக்கம் தனயன் வேறுபக்கம்

நேற்றைய தினம் தனது பிறந்த நாளை வீட்டில் சிறப்பாக கொண்டாடிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

தனது பிறந்த நாள் நிமித்தம் இன்றைய தினம் முதியோர்களுக்கு உணவு அளித்து, பரிசில்களையும் அளித்துள்ளார். இதில் அவரது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தங்கல்லை பொது வைத்தியசாலைக்கு தாய் ஷிராந்தி ராஜபக்சவுடன் சென்றுள்ளார் நாமல் ராஜபக்ச.

அங்கு சென்ற அவர்கள் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கி வைத்துள்ளனர்.

எனினும் இந்த செயற்பாடுகளில் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஒரு பக்கம் முன்னாள் ஜனாதிபதி ஆட்சி கவிழ்ப்பில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில், நாமல் ராஜபக்ச சிரமதானங்களிலும், பொதுப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வகையில் நாமலில் நற்பணி அவதாரம் மற்றும் மகிந்த குடும்பத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் மக்களிடையே இழந்த செல்வாக்கை மீட்டிக் கொள்வதற்கான செயற்பாடு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here