வீடுகளை உடைத்து கொள்ளையடித்த இருவர் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பிட்டிகல மற்றும் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை நேற்றைய தினம் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், நீர்கொழும்பு பகுதியில் உள்ள பல வீடுகளில் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபர்களிடம் இருந்து, கொள்ளையிட்ட தங்க நகைகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் மேலும் பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here