மன்னாரில் பல உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

மன்னாரில் வடமாகாணசபை உறுப்பினர் ஜீ.குணசீலனின் மாகாணசபை நிதி ஒதுக்கீட்டினூடாக உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உதவி திட்டங்கள் வழங்கி வைப்பு நேற்று வைபவ ரீதியாக இடம்பெற்றது.

அதற்கமைவாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பாலியாறு மாதர், கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் வெள்ளாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றிற்கு தலா ஒரு தொகுதி ஒலிபெருக்கித் தொகுதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அளவக்கை பங்கு ஆலயத்திற்கு ஓகன் வாத்தியக்கருவியும், மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பனங்கட்டிக்கோட்டு கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒலிபெருக்கி தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தரவன்கோட்டை மாதர், கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு தொகுதி சமையல் பாத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here