வன்னி பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் விபத்து

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் வாகனம் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளையான அனுராதபுரம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் பயணிக்கவில்லை என்பதுடன் அவரது சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வாகனத்தின் சக்கரத்தில் காற்று வெளியாகிய காரணத்தினால் எதிர்த் திசையில் வந்த இராணுவ கேப் ஒன்றுடன் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here