புதுவருடத்தில் யாழில் நடந்த விபத்து

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அரசாங்க பேருந்துடன் மோதுண்டு நபர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

சாவக்சேரிக்கும் நுணாவில் பகுதிக்கும் இடையில் இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் நோக்கி சென்ற பேருந்துடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இந்த நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறங்கி பார்த்த போது பேருந்தின் பின்புறமாக மோட்டர் சைக்கிளோடு , குறித்த நபர் வீழ்ந்து கிடந்தார். தண்ணீர் ஊற்றி குறித்த நபரை எழுப்பியுள்ளனர். தெய்வாதீனமாக உயிர்ச்சேதமன்றி அவர் தப்பியுள்ளார்.

பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் குறித்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here