குப்பை மேடு சரிவு! மரணித்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் இதுவரை மரணித்தவர்கள் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

இதில் நான்கு பேர் சிறுவர்கள் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் குப்பை மேட்டு சரிவினால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த குப்பை மேடு சரிவு காரணமாக கொழும்பில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் தேங்கும் நிலை எதிர்நோக்கப்படுகிறது.

இதனால் பாரிய நோய்கள் பரவுவதற்கான அச்சம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here