சசிகலாவின் அண்ணன் மகன் திடீர் மரணம்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

47 வயதான மகாதேவன் தஞ்சாவூரில் வசித்து வந்துள்ளார்.

திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்ற மகாதேவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது கும்பகோணம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

சசிகலாவின் 2 ஆவது அண்ணன் வினோதகன். இவரின் மகனே மகாதேவன் ஆவார்.

தஞ்சை தனியார் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

மகாதேவன் ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகாதேவன் மரணம் அடைந்த தகவல் உடனடியாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சசிகலா பரோலில் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here