வவுனியா ஓமந்தையில் முன்பள்ளி திறப்பு விழா

வவுனியாவில், ரி.ஆர்.ரியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சிவசக்தி அருந்ததி தலைமையில் முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை வேப்பங்குளத்தில் பெரியம்மா முன்பள்ளியே இன்று திறந்து வைக்கப்பட்டது.

சுமார் எட்டு லட்சம் ரூபாவில் கட்டப்பட்ட இந்த பெரியம்மா முன்பள்ளியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதேவேளை இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான தியாகராஜா, இந்திரராஜா, ஓமந்தை கிராம சேவையாளர் அனுஜா, வவுனியா வடக்கு முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் இராஜேஸ்வரன், வேப்பங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் கருணாநிதி மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் முன்பள்ளி மாணவர்களுக்கு அப்பியாசப்புத்தங்கள் வழங்கப்பட்டதுடன், ஞாபகார்த்தமாக முன்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here