தேர்தல் பிற்போடுவதற்கு யார் காரணம்?

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சும், தேர்தல் ஆணைக்குழுவும் பொறுப்பு சொல்ல வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் அதிகாரிகளது காரணிகளுக்கு அடிபணிந்திருக்காது, தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக தீர்மானங்களை எடுப்பது மிகவும் பொருத்தமானதாக அமையும்.

பொலிஸ் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு போன்றன பணிகளை செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு செயற்படுவது வருத்தமளிக்கின்றது.

தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதனால், உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் மக்கள் பணத்தை சட்டவிரோதமான முறையில் செலவிட்டு வருகின்றனர்.

மாநகரசபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் நகரசபைகள் கட்டளைச் சட்டங்களை மீறி அதிகாரிகள் செயற்படுகின்றனர்.

பல்வேறு காரணங்களைக் கூறி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதனை ஊகிக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here