மட்டக்களப்பில் சித்திரைப் புத்தாண்டு தமிழர் பாரம்பரிய கலாச்சார பெருவிழா

மட்டக்களப்பு பெரியகல்லாறு கல்லாறு விளையாட்டுக்கழகம் தனது 49ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் சித்திரைப் புத்தாண்டு தமிழர் பாரம்பரிய கலாச்சார பெருவிழாவினை ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த நிகழ்வுகள் பெரியகல்லாறு மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்த தமிழர் விளையாட்டு விழாவில் கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல், வழுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல், குரவை போடுதல், முட்டி உடைத்தல், தலையணைச்சமர், சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள், போர்த்தேங்காய் உடைத்தல், கோலாட்டம், கும்மி, கபடி போட்டி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

கல்லாறு விளையாட்டுக்கழக தலைவர் பெ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில், பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் கலந்து கொண்டதுடன் கௌரவ சிறப்பு, விசேட அதிதிகளாகவும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விளையாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து மாபெரும் இசை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here