மஹிந்த தரப்பினரின் மே தினக் கூட்டம்! வந்து குவியும் பெருமளவான பணம்?

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை நடாத்த பெருந்தொகை பணம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மே தினக் கூட்டத்தை நடாத்துவதற்காக கூட்டு எதிர்க்கட்சிக்கு பிரபல வர்த்தகர் ஒருவர் பத்து மில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாக சுதந்திரக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்யும் நோக்கில் இந்தப் பணம் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணம் வழங்கிய குறித்த வர்த்தகர் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில வர்த்தகர்கள் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்திற்காக பணம் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீவிர கவனம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டி கட்டம்பே மைதானத்திலும், கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் காலிமுகத் திடல் மைதானத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here