யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனத்துடன் மோதுண்டு 1 பலி, 2 காயம்

யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் பலி இருவர் காயம்

யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியின் வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை பூநகரி முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இன்று மாலை  யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக தனது சொந்த வாகனத்தில் பயணித்த யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனம் பூநகரி பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய  போது பின்னால் வந்த உந்துருளி வாகனத்துடன் மோதுண்ட போதே   ஒருவர் பலியாகியதுடன்  இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் அதில் ஒருவர் யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 பிரதான பாதையிலிருந்து முட்கொம்பன்  வீதிக்கு திரும்ப முற்பட்ட  வாகனத்தை முந்திச் செல்ல உந்துருளி முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது  அத்துடன் .
மேலதி விசாரணைகளை பூநகரி  பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்
               
Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here