வவுனியாவில் வாகன விபத்து: 7பேர் படுகாயம்

வவுனியா கல்குணாமடு பகுதியில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், சாரதிகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இருந்து இருந்து வவுனியா நோக்கி சென்ற வான் ஒன்றும், கார் ஒன்றும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது, இரு வாகனங்களும் பாதையை விட்டு விலகியதிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருவாகனங்களும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்துக்கானகாரணங்கள்குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here