இத்தாலியில் இருந்து இலங்கையரினால் அனுப்பப்பட்ட மதுபான கொள்கலன் மீட்பு!

இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான வகைககளை சுங்கப் பிரிவினர் அண்மையில் மீட்டுள்ளனர்.

இத்தாலியில் இருந்து இந்த மதுபான வகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் வாழ்ந்து வரும் இலங்கையர்களினால் இந்த மதுபான வகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இத்தாலியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றில் இந்த வெளிநாட்டு மதுபான வகைகள் மிகவும் நுட்பமான முறையில் வைக்கப்பட்டிருந்தது.

குறித்த கொள்கலனை திடீரென சோதனையிட்ட போது, அதில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு மதுபான வகைகள் மறைத்து கொண்டு வரப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

ஏழு இறக்குமதியாளர்கள் பெயர்களில் இந்த கொள்கலன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது என சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மதுபான வகைகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியதுடன், இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here