தந்தைக்கும் தனயனுக்கும் இடையில் மோதல்: தாய் பலி

கேகாலை – அரநாயக்க பகுதியில் இன்று(17) காலை இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கணவருக்கும் மகனுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் தலையிட்டமையாலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தாய் 61 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன், மோதல் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here