நீராடச் சென்று காணாமல் போன மாணவனின் சடலம் கரையொதுங்கியது

காத்தான்குடி கர்பலா கடலில் நீராடச் சென்று காணாமல் போன மாணவனின் சடலம் காத்தான்குடி கடற்கரையோரம் இன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஆலைரயம்பதி 3 பழைய கல்முனை வீதி வைரவர் கோயில் லேனைச் சேர்ந்த வீரசிங்கம் தர்மதன்(17 வயது) என்ற மாணவனே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது குடும்பத்தவருடன் ஞாயிற்றுக்கிழமை மாலை கடற்கரைக்கு சென்ற இந்த மாணவன் கடலில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இவரை கடற்படையினர் தேடி வந்த நிலையில் இவரின் சடலம் காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடற்கரையோரம் கரையொதுங்கியுள்ளது.

இதனை கண்ட பொது மக்கள் காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் சடலம் பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மாணவன் கடந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எழுதி அதில் 7ஏ மற்றும் 2பி பெறுபேற்றை பெற்றிருந்தார் எனவும் தெரிய வருகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here