யாழ். இளவாலை பிரதேச வைத்தியசாலையில் சிற்றுண்டிச்சாலை திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் – இளவாலை பிரதேச வைத்தியசாலையில் சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நோயாளர் நலன்புரிச்சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்றுண்டிச்சாலை திறப்பு விழா இன்று வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர்.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், யாழ்.பிராந்தியப் பிரதி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நந்தகுமார், வைத்திய நிபுணர் பேரானந்தராஜா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் வே.சண்முகநாதன், இளவாலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here