வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் நூதனமான முறையில் கொள்ளை

வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் உண்டியல் நேற்று உடைக்கப்பட்டு பெருமளவு பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை ஆறு மணியளவில் ஆலயம் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலை ஆலயத்தினை திறப்பதற்காக சென்றிருந்த போது ஆலயம் உடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஆலயத்திற்குச் சென்ற பொலிஸ் குழுவினர் ஆலய நிர்வாக சபையினரிடமும், ஆலய குருக்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஆலய மூலஸ்தானம் கத்தி கொண்டு உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளதுடன் ஆலயத்தின் அலுவலகத்தினை திருடர்கள் உடைத்து, அலுமாரியிலிருந்த சக்தி மிக்க ஒலிபெருக்கிச் சாதனத்தினை கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆலய முன்றலிலிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here