இலங்கையர்களாக மாறிய வெளிநாட்டு வெள்ளைக்காரர்கள்!

இம்முறையில் இலங்கையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெளிநாட்டவர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது.

புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு களியாட்ட நிகழ்வுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் அளுத்கம மொரகல்ல பகுதியிலுள்ள பிரபல ஹோட்டலில் புத்தாண்டு விளையாட்டு போட்டி ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

வெளிநாட்டவர்களுக்காக மாத்திரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புத்தாண்டு விளையாட்டு போட்டியில் பல நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கலாசாரம் சார்ந்த போட்டிகள் மற்றும் பல்வேறு அனுபவங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தாண்டு போட்டிகளில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் சறுக்கு மரம் ஏறுதல், தலையனை சண்டனை, பலூன் ஊதும் போட்டி உட்பட பல போட்டிகளில் கலந்துக் கொண்டனர்.

வெற்றியாளர்களுக்கு இதன் போது பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here