உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு! மீட்புப் பணி தொடர்கிறது!

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகஅதிகரித்துள்ளது.

மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளை படையினர்தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தம் காரணமாக பொதுமக்களின் பலவீடுகள் சேதமடைந்துள்ளதுடன்,அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, அடுத்த சில நாட்களில் கடுமையான மழை பெய்தால், குப்பை மேடு மீண்டும் ஒருமுறை சரிந்து விழும் அபாயம் இருப்பதாக அப்பகுதியை ஆய்வு செய்த புவியியல் துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

குப்பை கொட்டும் இடத்தை மாற்றுமாறு மீதொட்டமுல்ல பகுதி மக்கள் பல மாதங்களாகஆர்ப்பாட்டம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here