எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு விற்றால் விளைவுகள் விபரீதமாகும்

திருகோணமலையில் 101 எண்ணெய் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அதில் பாவிக்கக்கூடிய நிலையில் தற்போது 99 எண்ணெய் தாங்கிகள் காணப்படுவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த எண்ணெய் தாங்கிகள் மூலம் 10 இலட்சம் ரூபா வருமானம் பெறக்கூடும் என தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தில் இந்த எண்ணெய் தாங்கிகள் தொடர்பாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெளிவுபடுத்தி இருந்தார்.

இவ்வாறு திருகோணமலையில் உள்ள அரசுக்கு சொந்தமான அனைத்து எண்ணெய் தாங்கிகளையும் இந்திய பெற்றோலிய நிறுவனத்தினால் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாதம் 28ஆம் திகதி திருகோணமலையில் அனைத்து எண்ணெய் தாங்கிகளையும் இந்தியாவிற்கு விற்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது.

இதற்கு நாம் முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் விளைவுகள் விபரீதமாகுவதுடன், நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

இதை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இவற்றிற்கு மக்களே உரிமையானவர்கள். ஆகவே நாம் மக்கள் பக்கமே இருக்கின்றோம்.

நாம் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தால் நாடு பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். நாம் அரசுக்கு எதிராக ஒன்றிணையவில்லை, மக்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்கே ஒன்றிணைகின்றோம்.

இலங்கையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு விற்பதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று கனிய எண்ணெய் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here