கொழும்பில் பெருந்தொகை வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் இன்று(19) கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையின் மேற்குப்பிராந்திய படைப்பிரிவு உத்தியோகஸ்தர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, பாணந்துறை மோசடி தடுப்புப் பிரிவு பொலிசாருடன் இணைந்து கொழும்பு கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் 182 மீட்கப்பட்டுள்ளது.

இதனை எடுத்துச் சென்ற கார் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானப் போத்தல்களை எடுத்துச் சென்றிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன மருதானைப் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கார் மற்றும் மதுபானப் போத்தல்கள் சகிதம் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மருதானைப் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here