வித்தியா படுகொலை சந்தேகநபர்களுக்கு பலத்த பாதுகாப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் மே மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த படுகொலை வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற நிலையில், சந்தேகநபர்கள் 12 பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் 12 பேரும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here