8 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி, பன்னங்கண்டி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில் 29ஆவது நாளாக இன்றும் (19) தொடர்கிறது.

கிளிநொச்சி, பன்னங்கண்டி பிரதேசத்தில், தனியார் ஒருவருக்கு உரித்தான காணியில் 120 வரையான குடும்பங்கள் மிக நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.

நிரந்தர வீட்டுத்திட்டங்கள் ஏதும் இன்றி மீள்குடியேற்றத்தின் போது கடந்த 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆறு மாதங்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக குடியிருப்புக்களில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்பு அமைந்துள்ள காணி தனியாருக்கு சொந்தமானதென்பதால், குறித்த குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் போன்ற வசதிகள் இதுவரையில் வழங்கப்படாத நிலையில் அவற்றை வழங்குமாறு கோரி இம்மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,

நாங்கள் கடந்த 27 வருடங்களாக குடியிருந்து வரும் குறித்த காணித்துண்டுகளை அதன் உரிமையாளர் ஏதோ ஒரு உடன்படிக்கையின் படி வழங்குவதன்மூலம் தமக்கான நிரந்தர வீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here